திருநெல்வேலி மாவட்டத்தில் திருடுபோன 70 செல்போன்கள் மீட்கப்பட்டு, அவற்றை உரியவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ப. சரவணன் ஒப்படைத்தார். 
Regional01

70 செல்போன்கள் மீட்பு :

செய்திப்பிரிவு

திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சங்கு தலைமையில் ஆய்வாளர் ராஜ், உதவி ஆய்வாளர் ராஜரத்தினம்‌ ஆகியோர் அடங்கிய சைபர் கிரைம் காவல்துறையினர் செல்போன்கள் திருட்டு குறித்து விசாரணை நடத்தினர். தற்போது ரூ.10,46,500 மதிப்புள்ள 70 செல்போன்களை அவற்றின் ஐ.எம்.இ.ஐ (IMEI) எண்ணை வைத்து கண்டுபிடித்து, பறிமுதல் செய்துள்ளனர். இந்த செல்போன்களை உரியவர்களிடம் காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் ஒப்படைத்தார்.

பின்னர் அவர் கூறியதாவது:

இதுவரை மாவட்ட சைபர் கிரைம் காவல்துறை யினர் ரூ.50.21 லட்சம் மதிப்புள்ள 315 செல்போன்களை மீட்டுள்ளனர். அவை உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. இணையம் மூலம் வேலை வாங்கித் தருவதாகவும், பரிசு விழுந்திருப்பதாக மற்றும் OTP பெற்றுக்கொண்டு பண மோசடி செய்யப்பட்டதாக பெறப்பட்ட புகார்கள் மீது நடத்திய விசாரணையில், ஏமாற்றியவர்களின் வங்கி கணக்கை முடக்கி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ரூ.1.77 லட்சம் திரும்ப பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்யப்பட்ட பணத்தில் ரூ.5.36 லட்சம் வங்கிகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. செல்போனுக்கு வரும் OTP எண்களை பகிர வேண்டாம். இணையவழி குற்றங்கள் தொடர்பாக 155260 என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.

SCROLL FOR NEXT