மீன் வளர்க்கும் விவசாயிகளுக்கு மானியத்துடன் 2 புதிய திட்டங்கள் :

By செய்திப்பிரிவு

மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் தென்காசி மாவட்டத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் குளம் அமைத்து, மீன் வளர்த்து வரும் விவசாயிகளுக்கு 40 சதவீத மானிய த்துடன் கூடிய 2 புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளன.

பண்ணைக் குட்டைகளில் நீர் சேமிப்பு திறனை மேம்படுத்த பாலித்தீன் உறைகளிட்டு மீன் வளர்ப்பு மேற்கொள்ள 40 சதவீத மானியமாக ரூ.75 ஆயிரம் வழங்கப்படும். விரால் மீன் வளர்ப்புக்கு 40 சதவீத மானியமாக ரூ.30 ஆயிரம் வழங்கப்படும்.

நிர்ணயிக்கப்பட்ட இலக்குக்கு ஏற்றவாறு திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி தகுந்த பயனாளிகளின் விண்ணப்பங்கள் பதிவு மூப்பு அடிப்படையில் பராமரிக்கப்பட்டு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுவதற்கு சொந்த நிலத்தில் ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் மீன் வளர்த்து வருபவராக இருக்க வேண்டும். மாவட்ட மீன் வளர்ப்பு முகமையில் உறுப்பினராக இருக்க வேண்டும்.

கடந்த 2018-19 முதல் 2020-21 வரையுள்ள காலங்களில் மத்திய, மாநில அரசிடம் இருந்து உள்ளீட்டு மானியம் பெற்ற விவசாயிகள் இத்திட்டத்தில் மானியம் பெறுவதற்கு தகுதியற்றவர்கள்.

இத்திட்டத்தில் பயன்பெற விரும்புவோர் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 42 C. 26-வது குறுக்குத் தெரு, மகாராஜா நகர், திருநெல்வேலி 627011 என்ற அலுவலக முகவரியில் அல்லது 0462 2581488 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு விண்ணப்பத்தை பெற்று, பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் டிசம்பர் 17-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று, தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

24 mins ago

தமிழகம்

32 mins ago

கல்வி

42 mins ago

விளையாட்டு

47 mins ago

தமிழகம்

55 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்