கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் :

By செய்திப்பிரிவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வரும் 11-ம் தேதி அனைத்து நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது.

இதுதொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமானஆர்.கலைமதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

தேசிய சட்டப்பணிகள் மற்றும் மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் வழிகாட்டுதலின் பேரில் வரும் 11-ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் நடைபெற உள்ளது. தேசியமக்கள் நீதிமன்றத்தில் விவாகரத்து வழக்கு தவிர, உரிமையியல், மோட்டார் வாகன விபத்து, காசோலை மோசடி, வங்கி கடன், தொழிலாளர் நல வழக்குகள், சமாதானமாக போகக்கூடிய குற்றவியல் வழக்குகள் நீதிபதிகளை கொண்ட அமர்வுகளை ஏற்படுத்தி தீர்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும்.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கு மக்கள் நீதிமன்றத்தில் தீர்வு காணப்படுவதால் முத்திரை தாள் வாயிலாக செலுத்திய நீதிமன்ற கட்டணம் திரும்பப் பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

மேலும் மக்கள் நீதிமன்றம் வழங்கும் தீர்ப்பின் மீது மேல்முறையீடு செய்ய இயலாது. எனவே, வழக்கு நடத்துபவர்கள் மற்றும் பொதுமக்கள் நிலுவையில் உள்ள தங்கள் வழக்குகளை தேசியமக்கள் நீதிமன்றத்தில் சமரச தீர்வுக்கு எடுத்துக் கொள்ள தொடர்புடைய நீதிமன்றத்திலோ அல்லது சட்டப்பணிகள் குழுவிடமோ தெரிவித்து பயன்பெறலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

57 mins ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

2 hours ago

வாழ்வியல்

2 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

ஓடிடி களம்

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

6 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

தமிழகம்

6 hours ago

மேலும்