நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுக : ஆம்பூர் நகராட்சி ஆணையாளரிடம் பொதுமக்கள் மனு

By செய்திப்பிரிவு

ஆம்பூர் பகுதியில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளையும், மயான இடத்தில் கட்டப்பட்டுள்ள வீடுகளை அகற்றக்கோரி ஆணை யாளர் ஷகீலாவிடம், பொதுமக்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் வட்டம் கம்பிக்கொல்லை பகுதியைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்துக்கு வந்து ஆணையாளர் ஷகீலாவை சந்தித்து அவரிடம் கோரிக்கை மனு ஒன்றை அளித்தனர்.

அம்மனுவில் கூறியிருப்ப தாவது:

‘‘ஆம்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சமீபத்தில் பெய்த கனமழையால் எங்கு பார்த்தாலும் மழைநீர் குடியிருப்புப்பகுதிகளை சூழ்ந்துள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் சரிவர முடிக்கப்படாததால், அனைத்து சாலைகளும் குண்டும், குழியுமாகவும், சேறும், சகதியுமாக உள்ளது. மழைநீர் குட்டைப்போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

பருவமழை நின்றும் குடி யிருப்புப்பகுதிகளை சூழ்ந் துள்ள தண்ணீர் வடியாமல் தேங்கியுள்ளது. குறிப்பாக, பஜார் பகுதி, ரெட்டித்தோப்பு, பேருந்து நிலையம், உமர்சாலை, நேதாஜி சாலைகளில் கழிவுநீருடன், மழைநீர் கலந்து ஓடுகிறது. இதனால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆம்பூர் பகுதியில் நீர்நிலை களில் ஆக்கிரமிப்புகள் நிறைய உள்ளன. நீர்வரத்துக் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு கட்டிடங்கள் எழுப்பட்டுள்ளன. இதனால், மழைநீர் சீராக செல்ல முடியாமல் குடியிருப்புப்பகுதியில் புகுந்துள்ளன. ஆக்கிரமப்புகளை அகற்ற அதிகாரிகள் அக்கறை காட்டவில்லை.

அரசு புறம்போக்கு இடங்களில் அத்துமீறி வீடுகள் கட்டப் பட்டுள்ளன. மயானப்பகுதியை கூட விட்டுவைக்கவில்லை. குறிப்பாக, கம்பிக்கொல்லை பகுதியில் உள்ள மயானப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

இதனால், ரெட்டிதோப்பு, பெத்லகேம், மாங்காதோப்பு, ஏ.கே.சாமிநகர், ராமபுரம், கம்பிக்கொல்லை போன்ற பகுதியில் வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தார் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆக்கி ரமிப்புகளை அகற்றக்கூறினால் ஆக்கிரமிப்பாளர்கள் எங்களை மிரட்டுகின்றனர். எனவே, நீர் நிலைகள் மற்றும் அரசு புறம்போக்கு இடங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை நகராட்சி நிர்வாகம் உடனடியாக அகற்ற வேண்டும். நகராட்சிப்பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை வெளி யேற்றவும், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என அம்மனுவில் குறிப் பிட்டிருந்தனர்.

பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுவை பெற்ற நகராட்சி ஆணையாளர் ஷகீலா இது தொடர்பாக ஆய்வு நடத்தி விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

17 mins ago

இந்தியா

6 mins ago

தமிழகம்

41 mins ago

ஓடிடி களம்

43 mins ago

விளையாட்டு

58 mins ago

சினிமா

1 hour ago

உலகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

விளையாட்டு

1 hour ago

மேலும்