சிறுபான்மையின மாணவர்கள் - கல்வி உதவி தொகைக்கு நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும் : மாவட்ட ஆட்சியர்கள் பா.முருகேஷ், பாஸ்கர பாண்டியன் அறிவிப்பு

By செய்திப்பிரிவு

சிறுபான்மையின மாணவர்கள், கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள் என ஆட்சியர்கள் பா.முருகேஷ் (தி.மலை), பாஸ்கர பாண்டியன் (ராணிப்பேட்டை) ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “பள்ளி படிப்பு, பள்ளி மேற்படிப்புக்கு வருவாய் தகுதி அடிப்படையில் சிறுபான்மையின மாணவர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் புதுப்பிக்கும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.

தேசிய கல்வி உதவித் தொகை இணையத்தில் வரும் 30-ம் தேதிக்குள் (நாளை) புதுப்பித்து, அதற்கான விண்ணப்பத்தை சம்பந்தப்பட்ட கல்வி நிலையங்களில் ஒப்படைக்க வேண்டும். புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருமான சான்று சமர்பிக்க அவசியமில்லை.

ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பிக்காதவர் களும் தற்போது விண்ணப்பிக்க லாம். அனைத்து கல்வி நிலையங்களும் புதுப்பித்தல் கல்வி உதவித் தொகைக்கு தகுதி உள்ள மாணவர்களை தொடர்பு கொண்டு வரும் 30-ம் தேதிக்குள் புதுப்பிக்க அறிவுறுத்த வேண்டும். இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்” என தெரிவித்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

12 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

இந்தியா

18 mins ago

ஆன்மிகம்

28 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

சினிமா

8 hours ago

விளையாட்டு

9 hours ago

வணிகம்

9 hours ago

மேலும்