சரவெடி தயாரிக்க அனுமதி பெற்று தரக்கோரி - சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளர்கள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

சரவெடி தயாரிக்க அனுமதி பெற்றுத் தர மத்திய அரசு நட வடிக்கை எடுக்கக்கோரி சிவகாசி அருகே பட்டாசு தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிவகாசியில் பட்டாசு தொழிலை நம்பி நேரடியாக 3 லட்சம் தொழிலாளர்களும், அதன் உபதொழில்கள் மூலம் மறைமுகமாக 2 லட்சம் தொழி லாளர்களும் பணியாற்றி வரு கின்றனர். பட்டாசு தொழிலுக்கு பல்வேறு நெருக்கடி ஏற்பட்டு வருவதால் தொழில் நலிவடைந்து வேலைவாய்ப்பும் குறைந்து வரு கிறது.

பேரியத்தை பயன்படுத்தி பட்டாசு தயாரிக்க உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் சரவெடி தயாரிப்பதையும் தடை செய்துள்ளது.

ஆனால் 60 சதவீத பட்டாசுகள் பேரியத்தைப் பயன்படுத்தியே தயாரிக்கப்பட்டன. மொத்த உற் பத்தியில் 30 சதவீதம் சரவெடிகளே தயாரிக்கப்பட்டு வந்தன. சரவெடி தயாரிப்பை மட்டும் நம்பி ஒரு லட்சம் தொழிலாளர்கள் உள்ளனர்.

எனவே, மத்திய அரசு சரவெடி பட்டாசு தயாரிக்க பரிந்துரை செய்ய வலியுறுத்தி சரவெடி பட்டாசு உற் பத்தி பணிகளில் ஈடுபடும் தொழி லாளர்கள், சிவகாசி அருகே உள்ள மீனம்பட்டியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் பெண்கள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

சரவெடி பட்டாசுக்கு உச்ச நீதி மன்றம் விதித்துள்ள தடையால் தங்களின் வேலைவாய்ப்பு பறி போனதாகவும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் பட் டாசுத் தொழிலாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

சரவெடி தயாரிக்க மத்திய அரசு முயற்சியெடுத்து அனுமதியை பெற்றுத்தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அவர்களை போலீஸார் சமா தானப்படுத்தினர்.

அப்போது போலீஸாருக்கும் பட்டாசுத் தொழிலாளர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர், போராட்டத்தில் ஈடு பட்ட சரவெடி தயாரிப்பு தொழி லாளர்கள் தங்கள் கோரிக்கை குறித்து சிவகாசி சார் ஆட்சியர் பிருத்விராஜிடம் மனு அளித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

3 hours ago

சினிமா

3 hours ago

சினிமா

3 hours ago

மேலும்