ஆனைமலை ஏல மையத்துக்கு கொப்பரை வரத்து அதிகரிப்பு :

By செய்திப்பிரிவு

பொள்ளாச்சி: ஆனைமலை ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடந்த ஏலத்துக்கு 459 மூட்டை கொப்பரைகள் கொண்டு வரப்பட்டன.

இது குறித்து விற்பனைக்கூட கண்காணிப்பாளர் மணிவாசகம் கூறும்போது, ‘‘ஆனைமலை சுற்று வட்டாரப் பகுதியை சேர்ந்த விவசாயிகள், 459 மூட்டை கொப்பரைகளை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். வியாபாரிகள் முன்னிலையில் அவற்றை தரம் பிரித்து ஏலம் விட்டதில், முதல் தர கொப்பரை 238 மூட்டைகள், குவிண்டாலுக்கு குறைந்தபட்சம் ரூ.9670-க்கும், அதிகபட்சம் ரூ.10125-க்கும் விற்பனையானது. 2-ம் தர கொப்பரை 221 மூட்டைகள், குவிண்டாலுக்கு அதிகபட்சம் ரூ.9120-க்கும், குறைந்தபட்சம் ரூ.7550-க்கும் விற்பனையானது. 10 வியாபாரிகள், 62 விவசாயிகள் ஏலத்தில் பங்கேற்றனர். கடந்த வாரத்தை விட 238 மூட்டைகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. மொத்தம் 220 குவிண்டால் கொப்பரை ரூ.19.38 லட்சத்துக்கு ஏலமிடப்பட்டது” என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வாழ்வியல்

10 mins ago

தமிழகம்

12 mins ago

க்ரைம்

56 mins ago

சினிமா

55 mins ago

இந்தியா

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

கல்வி

2 hours ago

மேலும்