ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு நடவடிக்கை : கோவையில் அமைச்சர் ஆர்.காந்தி உறுதி :

By செய்திப்பிரிவு

கோவை: தமிழ்நாட்டின் கைத்தறி, துணிநூல் துறை வளர்ச்சிக்கான ஆலோசனைக் கூட்டம் அந்த துறையின் அமைச்சர் ஆர்.காந்தி தலைமையில் கோவையில் உள்ள தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்தில் (சிட்ரா) நேற்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், தமிழ்நாட்டில் பெரிய அளலான ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்கா அமைப்பது, பஞ்சு, கழிவு பஞ்சு மீதான 1 சதவீத வேளாண்மை நுழைவு வரியை ரத்து செய்ததன் காரணமாக பருத்தி உற்பத்தியை அதிகரித்தல், பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைப்பதில் உள்ள இடர்பாடுகளைக் களைந்து போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல் உள்ளிட்டவை குறித்து தொழில் முனைவோர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

இதில், ஜவுளித்துறை பிரதிநிதிகள், தென்னிந்திய நூற்பாலைகள் சங்கம், பின்னலாடை தொழில் அதிபர்கள், சிறு, குறு நூற்பாலைகளின் பிரதிநிதிகள், கரூர் ஏற்றுமதி சங்க பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்துகொண்டு ஆலோசனைகளை வழங்கினர். பின்னர், “தொழில் துறையினரின் கருத்துகள் முதல்வரிடம் தெரிவிக்கப்பட்டு, ஜவுளித் துறையின் வளர்ச்சிக்கு உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும்” என்று அமைச்சர்கள் ஆர்.காந்தி, செந்தில்பாலாஜி ஆகியோர் தெரிவித்தனர். இந்த கூட்டத்தில் கைத்தறி, துணிநூல் துறை அரசு முதன்மை செயலாளர் தர்மேந்தர் பிரதாப்யாதவ், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

15 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

7 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வாழ்வியல்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

தமிழகம்

11 hours ago

ஓடிடி களம்

12 hours ago

இந்தியா

11 hours ago

மேலும்