கிருதுமால் நதியில் தண்ணீர் திறப்பு - திருப்புவனம் அருகே 16 கிராமங்கள் துண்டிப்பு :

By செய்திப்பிரிவு

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கிருதுமால் நதியில் தண்ணீர் திறந்துவிட்டதால் 16 கிராமங்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் ஆற்றை ஆபத்தான முறையில் பள்ளி மாணவர்கள் கடந்து செல்கின்றனர்.

திருப்புவனம் அருகே ஓடாத்தூர், வல்லாரேந்தல், நாச்சியாரேந்தல், சிறுவனூர், எஸ்.வாகைக்குளம், நண்டுகாச்சி, பிரான்குளம், அருணகிரி மற்றும் விருதுநகர் மாவட்டம் சேந்தநதி, ரெட்டகுளம், ஆலாத்தூர், திருவளர்நல்லூர் உள்ளிட்ட 16 கிராமங்கள் கிருதுமால் நதியின் தெற்கு பகுதியில் அமைந்துள் ளன.

அக்கிராம மக்கள் மருத்துவம், கல்வி, வியாபாரம் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் வட பகுதியில் அமைந்துள்ள பழையனூருக்கு வந்து செல்கின்றனர். இதற்காக பழைய னூரில் இருந்து விருதுநகர் மாவட் டம் முக்குளம் வரை சாலை அமைக்கப்பட்டுள்ளது. கிருதுமால் நதியின் குறுக்கே தரைப்பாலம் அமைக்கப்பட்டு இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீர் சென்றபோது அந்த தரைப்பாலமும் சேதமடைந்தது. இதையடுத்து அப்பகுதியில் மேம் பாலம் கேட்டு 16 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பல ஆண்டுகளாக தொடர்ந்து போராடி வருகின்றனர்.

பாலம் அமைக்கப்படாத நிலையில் தற்போது கிருது மால் நதியில் தண்ணீர் திறக்கப் பட்டுள்ளது. ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுவதால் ஓடாத் தூர் உட்பட 16 கிராமங்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் பேருந்து போக்குவரத்து நிறுத்தப் பட்டது. இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கிருதுமால் நதியில் ஆபத்தான முறையில் கடந்து பழையனூரில் உள்ள பள்ளிக்குச் செல்கின்றனர். மேலும் பேருந்தும் நிறுத்தப்பட்டதால் 4 கி.மீ. வரை நடந்து செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து ஓடாத்தூர் கிராம மக்கள் கூறுகையில், ‘20 ஆண்டுகளுக்கு மேலாக கிருது மால் நதியில் மேம்பாலம் கட்டித் தர வலியுறுத்தி வருகிறோம். நட வடிக்கை இல்லாததால் நதியில் தண்ணீர் செல்லும் சமயங்களில் சிரமப்படுகிறோம். மாணவர்கள் இடுப்பளவு நீரில் ஆபத்தான முறையில் பள்ளிக்கு சென்று வருகின்றனர், என்று கூறினர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

35 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

10 hours ago

விளையாட்டு

12 hours ago

இந்தியா

12 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

மேலும்