வெள்ள சேத பாதிப்பு ரூ.224 கோடி :

By செய்திப்பிரிவு

வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையால் தற்போது வரை ரூ.199 கோடி மதிப்பிலான சேதங்கள் ஏற்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். 498 வீடுகள் சேதமடைந்துள்ளன. மாவட்டத்தில் 101.08 கி.மீ சாலைகள், 16 தரைப்பாலங்கள், சிறுபாலங்கள், 30 ஏரி, குளங்கள், ஊரணிகள், 9 மேல்நிலை குடிநீர் தொட்டிகள், 38 ஆழ்துளைக் கிணறுகள், 16,457 மீட்டர் தொலைவுக்கு குடிநீர் குழாய், 18 திறந்தவெளி கிணறுகள் சேதமடைந்துள்ளன. மொத்தம் 687.12 ஹெக்டேர் அளவுக்கு பயிர்கள் சேதமடைந்துள்ளன.

அதேபோல், ராணிப்பேட்டை மாவட்டத்தில் கடந்த 11-ம் தேதி முதல் 21-ம் தேதி வரை 413 வீடுகள், 3 சிறுபாலங்கள், 33.65 கி.மீ தொலைவுக்கு குடிநீர் குழாய்கள், 10 கி.மீ சாலைகள், 30 மின் கம்பங்கள் சேதமடைந்துள்ளதுடன் 15 கால்நடைகள் உயிரிழந்துள்ளன. மழை வெள்ளம் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். வெள்ளத்தால் 974 விவசாயிகளின் 210.47 ஹெக்டேர் நெற்பயிர், 3,051 விவசாயிகளின் 1,981 ஹெக்டெர் நெற்பயிர், 812 விவசாயிகளுக்குச் சொந்தமான 380.397 ஹெக்டேர் தோட்டக்கலை பயிர்கள் சேதமடைந்துள்ளன.

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 3,258 ஹெக்டேர் அளவுக்கு பயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் மொத்த சேதம் ரூ.24.95 கோடி என தெரிய வந்துள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

10 hours ago

ஜோதிடம்

11 hours ago

மேலும்