‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகளுக்கு ரூ.2 கோடி : முதல்வரிடம் தனியார் நிறுவனங்கள் வழங்கின

By செய்திப்பிரிவு

கோவை மாநகராட்சி பகுதிகளில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் வளர்ச்சி திட்டப் பணிகள் மேற்கொள்ள, தனியார் நிறுவனங்கள் சார்பில் ரூ.2 கோடி நிதி முதல்வரிடம் வழங்கப்பட்டது.

தமிழகத்தில் அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பீட்டில் நீர் நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு, விளையாட்டு வசதி ஏற்படுத்துதல், மரக்கன்றுகள் நடவு செய்தல்,பள்ளிக்கூடங்களை மேம்படுத்து தல், சாலைகள், தெரு விளக்குகள் அமைத்தல் போன்ற அடிப்படை பணிகளைச் செய்ய, ‘நமக்கு நாமே திட்டம்’ செயல்படுத்தப்படும் என்றும், பொதுமக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், குடியிருப்போர் நலச் சங்கங்கள், சி.எஸ்.ஆர். நிதி வழங்கும் நிறுவனங்கள் நிதி அளித்தால், அரசு சார்பிலும் நிதி ஒதுக்கப்பட்டு மக்கள் பணிகள் மேற்கொள்ளப்படும்” என தமிழக அரசு அறிவித்திருந்தது.

இந்நிலையில், கோவையில்நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலினி டம், கோவை மாநகரில் ‘நமக்கு நாமே’ திட்டத்தின் கீழ் சின்னவேடம்பட்டி ஏரி நீர் பிடிப்பு பகுதிகளை சீரமைக்க பங்களிப்புத் தொகையாக ரூ.30 லட்சம், கால்வாய்களைத் தூர்வாரும் பணிக்கு ரூ.32 லட்சம், மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கு ரூ.26 லட்சம், அபிவிருத்தி பணிகளுக்கு ரூ.1.15 கோடி என மொத்தமாக ரூ.2 கோடியே 3 லட்சம் தனியார் நிறுவனங்கள் சார்பில் காசோலையாக வழங்கப்பட்டன.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

58 mins ago

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

தமிழகம்

8 hours ago

சினிமா

9 hours ago

சினிமா

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

இந்தியா

13 hours ago

தமிழகம்

13 hours ago

தமிழகம்

13 hours ago

சுற்றுச்சூழல்

14 hours ago

மேலும்