தல்வர் ஸ்டாலின் 29-ம் தேதி சேலம் வருகை :

By செய்திப்பிரிவு

சேலம்: சேலம் மாவட்டத்தில் நடக்கும் அரசு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வரும் 29-ம் தேதி சேலம் வருகிறார்.

இதற்காக சென்னையில் இருந்து 29-ம் தேதி காலை தனி விமானம் மூலம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் விமான நிலையத்துக்கு வரும் முதல்வர் ஸ்டாலின் அங்கிருந்து கார் மூலம் உடையாப்பட்டி பை-பாஸ் ரோட்டில் நடக்கும் அரசு விழாவில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளார். பின்னர் ஏற்கெனவே தாலுகா வாரியாக நடந்த மக்கள் குறைதீர்க்கும் சிறப்பு முகாமில் பெறப்பட்ட மனுக்களில் தகுதி வாய்ந்த மனுக்களை பரிசீலனை செய்து தேர்வு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கவுள்ளார்.

மாலை சேலம் ஐந்து ரோட்டில் உள்ள ஜெயரத்னா திருமண மண்டபத்தில் நடக்கும் விழாவில் பங்கேற்று மறைந்த திமுக தேர்தல் பணிக்குழு செயலாளர் வீரபாண்டி ராஜாவின் உருவப்படத்தை திறந்துவைக்கிறார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

38 mins ago

இந்தியா

35 mins ago

இந்தியா

47 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

4 hours ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

4 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்