கழுகுமலையில் சமணர் சிற்பங்களை - நெல்லை மாணவிகள் பார்வை :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருங்காட்சியகம் மற்றும் பரணி வரலாற்று மையம் சார்பில் உலக மரபு வாரத்தை முன்னிட்டு ‘தமிழகத்தின் எல்லோரா’ என்றழைக்கப்படும் கழுகுமலை வெட்டுவான் கோயிலுக்கு மரபு நடை மேற்கொள்ளப்பட்டது.

அருங்காட்சியக காப்பாட்சியர் சத்திய வள்ளி தலைமையில் கல்லூரி மாணவிகள் வெட்டுவான் கோயிலையும், அதன் மீது செதுக்கப்பட்ட சிற்பங்களையும் பார்வையிட்டனர். இதுதொடர்பாக மாணவிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது. தொடர்ந்து சமணர் பள்ளி, படுகை ஆகியவற்றையும் மாணவிகள் ஆர்வமுடன் பார்வையிட்டனர். கழுகுமலை அரசு மேல்நிலைப் பள்ளி ஆசிரியர் கந்தையா, வெட்டுவான் கோயில், சமணர் படுகை குறித்தும், கழுகுமலைக்கு சமணர்கள் வருகை குறித்தும் மாணவிகளுக்கு விளக்க மளித்தார். மரபு நடை பயணத்தில் பொதிகை தமிழ்ச் சங்கத் தலைவர் கவிஞர் பேரா, கலையாசிரியர் சொர்ணம், கவிஞர் ந.சுப்பையா உட்பட பலர் கலந்துகொண்டனர்.

ஆசிரியர் கந்தையா, வெட்டுவான் கோயில், சமணர் படுகை குறித்தும், கழுகுமலைக்கு சமணர்கள் வருகை குறித்தும் மாணவிகளுக்கு விளக்கமளித்தார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

8 mins ago

தமிழகம்

1 hour ago

ஆன்மிகம்

26 mins ago

கல்வி

6 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்