பிறந்து 40 நாட்களே ஆன குழந்தைக்கு முதல்வரின் காப்பீட்டு திட்ட அட்டை :

By செய்திப்பிரிவு

கோவை: கோவையில் உள்ள சரணாலயம் தத்து வழங்கும் மையத்தில் ஒப்படைக்கப்பட்ட, பிறந்து 40 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு இருதய அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர் பரிந்துரைத்தார். எனவே, அக்குழந்தைக்கு முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க சிறப்பு பரிந்துரை செய்யப்பட்டது. இதையடுத்து, தமிழகத்தில் முதல்முறையாக அந்த குழந்தைக்கென தனியாக ஒரு மருத்துவ காப்பீட்டு அட்டையை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் நேற்றுமுன்தினம் வழங்கினார். இந்த காப்பீட்டு திட்ட அட்டையை பயன்படுத்தி குழந்தைக்கு தனியார் மருத்துவமனையில் இருதய அறுவைசிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. இந்த நிகழ்வின்போது, சுகாதாரத்துறை இணை இயக்குநர் சந்திரா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அலுவலர் சுந்தர், மருத்துவ காப்பீட்டு திட்ட அலுவலர் கிஷோர்குமார், மாவட்ட அலுவலர் கருண மஹாராஜா ஆகியோர் உடன் இருந்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

6 hours ago

வணிகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

க்ரைம்

7 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

உலகம்

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்