கோயம்பேட்டில் பழங்கள் விலை உயர்வு :

By செய்திப்பிரிவு

வரத்து குறைவாக இருப்பதால், ஆயுத பூஜையை முன்னிட்டு கோயம்பேடு சந்தையில் பழங்களின் விலை உயர்ந்துள்ளது.

இது தொடர்பாக பழ வியாபாரிகள் சிலர் கூறியதாவது:

ஒரு கிலோ ரூ.80-ல் இருந்து ரூ.120 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த ஆப்பிள் ரூ.90-ல்இருந்து ரூ.130, ஒரு கிலோ சப்போட்டா ரூ.40-ல் இருந்து ரூ.60, ஒரு கிலோ சாத்துகுடி ரூ.25-ல் இருந்து ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கோயம்பேடு சந்தைக்கு வழக்கமாக 60 லாரிகளில் சாத்துக்குடி வரும். ஆயுத பூஜையையொட்டி சுமார் 25 லாரிதான் வந்துள்ளது. ஆப்பிள் 80 லாரிகளில் வரும். தற்போது, 30 லாரிகள்தான் வந்துள்ளன. வியாபாரம் இல்லாத காரணத்தால் யாரும் பழங்கங்களை வரவழைக்க விரும்பவில்லை. அதனால்தான் வரத்து குறைவாக உள்ளது. வரத்து குறைவாக இருக்கும் காரணத்தால் விலை உயர்ந்துள்ளது என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

4 hours ago

உலகம்

4 hours ago

மேலும்