போலி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் : அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை

By செய்திப்பிரிவு

போலி விவசாயிகளிடம் நெல் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் பி.மூர்த்தி எச்சரிக்கை விடுத் துள்ளார்.

மதுரை கிழக்கு தொகுதி அரும்பனூரில் கூட்டுறவுத் துறை சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்து அமைச்சர் பேசியதாவது: இடைத்தரகர்கள், வியாபாரிகள் உள்ளிட்டோர் விவசாயிகள் போர்வையில் நெல் விற்பனைக்கு முயற்சிக்கின் றனர். இவர்களிடம் கொள்முதல் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

உசிலம்பட்டி பகுதியில் நெல் கொள்முதல் நிலையங்களைத் தவறாகப் பயன்படுத்த சிலர் முயற்சித்தனர். அதுபோன்ற நிலை இங்கு இருக்கக் கூடாது. அந்தந்தப் பகுதியில் நிலம் வைத்திருக்கும் விவசாயிகள்தான் என்பதை உறுதிப்படுத்தும் சான்றிதழ்கள், அடையாள அட்டைகள் வழங்கப்பட உள்ளன. இதன் பின்னர், வெளிநபர்கள் நெல் கொள்முதல் நிலையங்களுக்கு வருவது தவிர்க்கப்படும்.

ஈரமான நெல்லைக் கொண்டு வருவதை விவசாயிகள் தவிர்க்க வேண்டும். கரோனா தொற்று அதிகரித்து வருவதால் கரோனா தடுப்பு விதிமுறைகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினார்.

ஆட்சியர் எஸ்.அனீஷ் சேகர், எம்எல்ஏ.க்கள் எம்.பூமிநாதன், ஆ.வெங்கடேசன், மாவட்ட வருவாய் அலுவலர் கோ.செந்தில்குமாரி, கூட்டுறவு இணைப் பதிவாளர் சி.குருமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

5 mins ago

தமிழகம்

33 mins ago

தமிழகம்

41 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

இந்தியா

2 hours ago

உலகம்

1 hour ago

க்ரைம்

2 hours ago

சுற்றுச்சூழல்

2 hours ago

மேலும்