கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு - அஞ்சல் துறை நடத்திய ஓவியப் போட்டி முடிவுகள் :

By செய்திப்பிரிவு

கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு தொடர்பாக அஞ்சல் துறை நடத்திய ஓவியப் போட்டியின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

பள்ளிக் குழந்தைகளிடம் உள்ள ஓவியத் திறனை வெளிக் கொணரவும், அஞ்சல்தலை குறித்து அறிந்து கொள்ளவும் சென்னை அண்ணா சாலை தலைமை அஞ்சலகத்தில் உள்ள சிறப்பு அஞ்சல் தலை மையம் சார்பில், கரோனா தடுப்பூசி விழிப்புணர்வு சிறப்பு அட்டைகளை வடிவமைப்பதற்கான ஓவியப் போட்டி நடைபெற்றது.

இதில், முதல் நிலைப் பிரிவில் (6-10 வயது) 67 குழந்தைகளும், இரண்டாம் நிலைப் பிரிவில் (11-15 வயது) 104 குழந்தைகளும் பங்கேற்றனர்.

முதல்நிலை பிரிவில் கோவை டெல்லி பப்ளிக் பள்ளி மாணவர் ஜி.சபரிஷ், கோவை குழந்தை ஏசு கான்வென்ட் மேல்நிலைப் பள்ளி மாணவர் எஸ்.அபினவ், சென்னை கோவூர் கிரிஷ் இன்டர்நேஷனல் பள்ளி மாணவி எஸ்.தர்ஷினி, சென்னை கே.ஆர்.எம். பப்ளிக் பள்ளி மாணவி நிஹாரிகா கேர்கெட்டா ஆகியோர் முதல் 4 இடங்களைப் பிடித்தனர்.

அதேபோல, இரண்டாம் நிலைப் பிரிவில் புதுச்சேரி கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவர் எஸ்.முகுந்த், ஒடிசா மாநிலம், பாலசோர் டவுன் உயர்நிலைப் பள்ளி மாணவி பிந்து சுகேஷினி தாஸ், வடலூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி என்.நூருல் அப்ரிதா, சென்னை முருக தனுஷ்கோடி பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவி ஏ.ஷிஃபானாவு ஆகியோர் முதல் 4 இடங்களைப் பிடித்துள்ளனர் என்று அஞ்சல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

2 hours ago

ஜோதிடம்

2 hours ago

விளையாட்டு

6 hours ago

விளையாட்டு

8 hours ago

இந்தியா

9 hours ago

வணிகம்

9 hours ago

விளையாட்டு

10 hours ago

இணைப்பிதழ்கள்

10 hours ago

க்ரைம்

10 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

தமிழகம்

12 hours ago

மேலும்