கல்விக் கடன் பெற உதவி மையத்தில் ஆலோசனை : சேலம் ஆட்சியர் தகவல்

By செய்திப்பிரிவு

உயர் கல்வி பயில கல்வி கடன் பெற உதவி மையம் மூலம் ஆலோசனை வழங்கப்படுகிறது என சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

ஏழை எளிய மாணவர்கள் உயர் கல்வியைத் தொடர கல்விக் கடன் முனைப்புத் திட்டத்தின் கீழ் வங்கிகள் மூலம் கல்விக் கடனுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் வங்கிக் கடன் வசதியை பெற அரசு இணையதளமான வித்யாலட்சுமி வலைதளத்தில் https://www.vidyalakshmi.co.in உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்க வங்கிச் சேமிப்பு கணக்கு (மாணவர் மற்றும் பெற்றோர்), பாஸ்போர்ட் அளவு புகைப்படம் (மாணவர் மற்றும் பெற்றோர்), வருமான வரித்துறையால் வழங்கப்படும் பான் கார்டு (PAN) (மாணவர் மற்றும் பெற்றோர்), ஆதார் அட்டை, வருமானச் சான்று, மதிப்பெண் சான்று, கல்லூரியில் சேர்க்கைக்கான ஒதுக்கீட்டுக் கடிதம், கல்விக் கட்டண விவரம் உள்ளிட்டவை இணைக்க வேண்டும்.

கல்விக் கடன் திட்டம் பற்றி தெரிந்து கொள்ள, மாணவர்கள் ஏற்கெனவே படித்த பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டு வழிகாட்டப்பட்டு வருகிறது.

கல்விக் கடன் பெற உதவி வேண்டுவோருக்கு ஆலோசனை வழங்கவும், மாவட்ட ஆட்சியர் அலுவலக இரண்டாம் தளத்திலுள்ள அறை எண் 211-ல் உதவி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த மையத்தின் மூலம் கல்விக் கடன் தொடர்பாக கூடுதல் விவரங்கள் தேவைப்படுவோர் தொலைபேசி எண் 0427-2414200, வாட்ஸ்அப் எண் 9342752510, மின்னஞ்சல் முகவரி salemeducationalloan@gmail.com மற்றும் mailto:salemeducationalloan@gmail.com உள்ளிட்ட தகவல் தொடர்பு வசதி மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

மேலும், சேலம் மாவட்ட நிர்வாக இணையதளமான https://salem.nic.in என்ற தேசிய தகவலியல் இணையதளத்திலும் கல்விக் கடன் தொடர்பான விவரங்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

8 hours ago

மேலும்