சாலையோர வியாபாரிகள் போராட்டம் :

By செய்திப்பிரிவு

சங்கரன்கோவிலில் நூற்றுக்கும் மேற்பட்ட சாலையோர வியாபாரிகள் உள்ளனர். இவர்கள் என்.ஜி.ஓ.காலனி முதல் அரசு மருத்துவமனை வரையும் மற்றும் திருவேங்கடம் சாலையிலும் சாலை ஓரங்களில் கடைகளை நடத்தி வருகின்றனர். கடந்த மாதம் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்ட போது, சாலையோர கடைகள் அனைத்தும் அகற்றப்பட்டன.

மீண்டும் கடைகளை நடத்த முடியாததால், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியும், வியாபாரிகளிடம் அதிக கட்டணம் வசூல் செய்வதாக கண்டனம் தெரிவித்தும் சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகத்தை சாலையோர வியாபாரிகள் தங்கள் குடும்பத்துடன் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். சாலையோர வியாபாரிகள் சங்கத் தலைவர் செல்வராஜ் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் சாந்தி பேச்சுவார்த்தை நடத்தினார். இதில், பேருந்து நிலையம் அருகே உள்ள இடத்தை சீரமைத்து வியாபாரம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து கலந்து பேசி முடிவு எடுப்பதாகக் கூறிய வியாபாரிகள் போராட்டத்தை கைவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

3 mins ago

கல்வி

9 mins ago

மாவட்டங்கள்

39 mins ago

உலகம்

44 mins ago

தமிழகம்

49 mins ago

தொழில்நுட்பம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

1 hour ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

மேலும்