பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறப்பு : உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வரவேற்பு

By சுப.ஜனநாயக செல்வம்

பல மாதங்களுக்குப் பிறகு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாண வர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர்.

கரோனா முதல் அலையால் 2020-ம் ஆண்டு மார்ச்சில் இருந்து பள்ளிகள், கல்லூரிகள் மூடப் பட்டன. அதனைத் தொடர்ந்து அரசு பொதுத்தேர்வு எழுதும் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் நடந்தன.

அதன்பின்னர் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அரசு அறிவித்தது. பிறகு 2021-ல் கரோனா 2-வது அலையால் பள்ளிகள் மீண்டும் மூடப்பட்டன. ஆன்லைனில் பாடங்கள் நடத்தப் பட்டாலும், மாணவர்களின் கல்வி பாதித்தது. மேலும் மாணவர்கள் இடைநிற்கும் அபாயம் உருவானது. தற்போது கரோனா கட்டுக்குள் வந்ததையடுத்து செப்.1 முதல் 9,10, பிளஸ் 2 வகுப்புகளை திறக்க அரசு உத்தரவிட்டது.

மேலும் முகக் கவசம், சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற் கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன்படி நேற்று தமிழகம் முழுவதும் பள்ளிகள் திறக்கப் பட்டன. இருந்தாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயமில்லை எனவும் அரசு அறிவித்துள்ளது.

பல மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதால் மாணவர்கள் உற்சாகத்துடன் பள்ளிக்கு வந்தனர். அவர்களை ஆசிரியர்கள் இன்முகத்துடன் வரவேற்றனர்.

இதுவரை வீடுக ளிலேயே முடங்கிக் கிடந்ததால் உளவியல் ரீதியாக சோர்வடைந்து இருந்த மாணவர்கள், சக நண் பர்களை சந்தித்த மகிழ்ச்சியில் திளைத்தனர்.

மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரா.சுவாமிநாதன் கூறியதாவது: மாவட்டத்தில் நேற்று மொத்தம் 534 பள்ளிகள் உள்ளன. இதில் 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளைச் சேர்ந்த 1,65,684 மாணவர்கள் உள்ளனர்.

மாணவர்கள் அனைவரும் முகக்கவசம் அணிந்து வந்தனர். 90 சதவீத மாணவர்கள் வந்துள்ள நிலையில் சில நாட்களில் 100 சதவீதத்தை எட்டி விடும் என்றார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் நகரின் மத்தியில் அமைந்துள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளிக்கு வந்த மாணவிகளுக்கு ஆசிரியைகள் பூக்களை கொடுத்து வரவேற்றனர். மொத்தம் 60 சதவீத மாணவர்கள் வருகை தந்திருந்ததாக ஆசிரியர் கள் தெரிவித்தனர்.

அனைத்து பள்ளிகளிலும் மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதிக்கப் பட்டது. பள்ளி வளாகங்களில் கரோனா பரவல் தடுப்பு குறித்த வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.

ஒரு வகுப்புக்கு இருபது பேர் மட்டுமே அமர வைக்கப்பட்டனர். நீண்ட இடைவெளிக்கு பின் பள்ளி கள் திறக்கப்பட்டதால் முன்னதாக பள்ளி வகுப்பறைகளில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, பள்ளி வளாகத்தை தூய்மைப்படுத்தும் பணி கடந்த இரண்டு தினங்களாக நடந்தது

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஓடிடி களம்

20 mins ago

வணிகம்

32 mins ago

இந்தியா

57 mins ago

தமிழகம்

2 mins ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

சினிமா

2 hours ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

2 hours ago

க்ரைம்

2 hours ago

வணிகம்

2 hours ago

மேலும்