திருநெல்வேலியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நிர்வாக அலுவலகத்துக்கு திருநெல்வேலி சரக காவல்துறை துணைத் தலைவர் பிரவீன்குமார் அபினபு அடிக்கல் நாட்டினார்.படம்:மு.லெட்சுமிஅருண் 
Regional01

ஆயுதப்படை அலுவலகத்துக்கு புதிய கட்டிடம் கட்ட அடிக்கல் :

செய்திப்பிரிவு

திருநெல்வேலியிலுள்ள மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள நிர்வாக அலுவலகத்துக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படை நிர்வாக அலுவலகம் பழைய கட்டிடத்தில் இயங்கிக் கொண்டிருக்கிறது. இங்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு தற்போது ஒப்புதல் கிடைத்துள்ளது. புதிய கட்டிடம் கட்டுவதற்கான பூமி பூஜை ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்றது. திருநெல்வேலி சரக காவல்துறை துணைத்தலைவர் பிரவீன்குமார் அபினபு, எஸ்பி மணிவண்ணன் ஆகியோர், கட்டிடப் பணியை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தனர். மாவட்ட குற்ற ஆவணக் காப்பக டிஎஸ்பி பெரியசாமி, ஆயுதப்படை காவல் ஆய்வாளர் டேனியல் கிருபாகரன், உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவல் துறையினர் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT