புதுவையில் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலவாரியம் செயல்பாட்டுக்கு வருமா? :

By செய்திப்பிரிவு

அரசாணை வெளியிட்டு 10 மாதங்களாகியும் அமைப்புசாரா தொழி லாளர்கள் நலவாரியம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

புதுவை பிரதேச அமைப்புசாரா தொழிலாளர்கள் சமூக பாதுகாப்புக்காக நல வாரியம் அமைக்க கடந்த ஆண்டு நவம்பர் 18-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. 10 மாதமாகியும் நலவாரியம் செயல்பாட்டுக்கு வரவில்லை.

இதுதொடர்பாக புதுவை பிரதேச சிஐடியூ பொதுச்செயலாளர் சீனு வாசன் கூறுகையில், “அரசாணைவெளியிட்டும் நலவாரியம் தொடங் காதது தொழிலாளர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அண்டை மாநிலங்களான தமிழகம், கேரளம், ஆந்திராவில் பல வகையில் தொழிலாளர்களுக்கு தனித்தனி வாரியங்கள் செயல்பட்டு வருகின்றன. இரண்டு ஆண்டுகளாக கரோனாவால் பாதிப்புக்கு ஆளான தொழிலாளர்களுக்கு அந்தந்த நலவாரியங்கள் மூலமாக பல வகையான பொருளாதார உதவிகள் அரிசி, மளிகை, காய்கறிகள் தருவது போன்ற உதவிகள் செய்யப்பட்டுள்ளன.

புதுவையில் ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் கடுமையான போராட்டத்துக்கு பின் நலவாரியம் அமைக்கப்பட்டது.

ஆனால் இவ்வாரியம் செயல்படாமல் இருப்பது கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை அரசு இனியும் காலம் கடத்தாமல் நலவாரியத்தை செயல்படுத்த வேண்டும்.

ஒட்டுமொத்த அமைப்புசாரா தொழி லாளர்களுக்கான நலவாரியம் என்பதால் முதல்கட்டமாக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

54 secs ago

கல்வி

20 mins ago

ஆன்மிகம்

37 mins ago

ஆன்மிகம்

45 mins ago

ஆன்மிகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்