மூன்றாவது அலை பரவுவதை தடுக்க - கரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா மூன்றாவது அலை பரவுவதைத் தடுக்க மாவட்டங் களில் கரோனா விழிப்புணர்வு வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது.

தமிழகத்தில் கரோனா 3-ம் அலை பரவல் தடுப்பு நடவடிக்கைகள் அரசு சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரத் தொடக்க விழா மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. மாநகராட்சி ஆணையாளர் சிவசுப்பிரமணியன், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் கே.விஜயகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பயணிகளிடம் துண்டுப் பிரசுரம் விநியோகித்தும், பேருந்தின் முகப்பில் விழிப்புணர்வு ஸ்டிக்கர் ஒட்டியும் தொடர் பிரச்சாரத்தை ஆட்சியர் ச.விசாகன் தொடங்கி வைத்தார். பின்னர் ஊர்வலத்தை தொடங்கி வைத்து அவர் கூறிய தாவது:

மூன்றாவது அலையால் கரோனா பாதிப்பு அதிகரிக்காமல் தடுக்க பொதுமக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்டம் முழுவதும் ஒரு வாரம் தொடர் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன. மாவட்டத்தில் இதுவரை 5 லட்சத்து 88 ஆயிரம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்றார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாநகராட்சி நகர்நல அலுவலர் லட்சியவர்ணா, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர்கள் ஜெயந்தி, நளினி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் தேசபந்து திடலில் கரோனா விழிப்புணர்வுப் பேரணியை மாவட்ட ஆட்சியர் ஜெ.மேகநாதரெட்டி தொடங்கி வைத்துப் பேசியதாவது:

மாவட்டத்தில் ஆக.1 முதல் 7-ம் தேதி வரை கரோனா விழிப்புணர்வு வாரமாக கடைப்பிடிக்கப்படுகிறது. தினமும் அரசுத் துறைகள் மூலம் பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

ரயில், பேருந்து நிலையங்கள், கடை வீதிகள் போன்ற பொது மக்கள் அதிகம் கூடுமிடங்களில் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியைக் கடைப் பிடிக் கவும் துண்டுப் பிரசுரங்கள், சிற் றேடுகள் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது என்றார்.

ஆட்சியர் தலைமையில் அலு வலர்கள், பொதுமக்கள் கரோனா பரவுவதை தடுக்க விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர்.

மதுரை

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் நகராட்சி சார்பில் காய்கனி சந்தை, மலர் சந்தை, பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதியில் நகராட்சி ஆணையாளர் ரத்தினவேல் தலைமையில் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது. முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, தடுப்பூசி செலுத்துதல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதில் சுகாதார ஆய்வாளர்கள் அகமது கபீர், சரவணபிரபு மற்றும் நகராட்சி பணியாளர்கள் ஈடுபட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 min ago

தமிழகம்

17 mins ago

தமிழகம்

20 mins ago

சினிமா

41 mins ago

இந்தியா

44 mins ago

வணிகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்