மதுரை மாரியம்மன் கோயில் பெயரில் வண்டியூரை சேர்க்கக் கோரி வழக்கு : அறநிலையத் துறை பதில் அளிக்க உத்தரவு

By செய்திப்பிரிவு

மதுரை மாரியம்மன் கோயில் பெயர் பலகையில் வண்டியூர் என்பதையும் சேர்க்கக் கோரிய வழக்கில், அறநிலையத் துறை இணை ஆணையர் பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தர விட்டுள்ளது.

வண்டியூரைச் சேர்ந்த துரைப் பாண்டியன், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

மதுரை மாநகராட்சிக்குட்பட்ட வண்டியூர் கிராமம் 400 ஆண்டுகள் பழமையானது. இங்குள்ள மாரியம்மன் கோயில் அருகே உள்ள தெப்பக்குளம் வரலாற்று ஆவணங்கள் மற்றும் வருவாய் ஆவணங்களில் வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.

வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளத்தை தோண்டும் போது முக்குறுணி விநாயகர் சிலை கிடைத்தது எனக் குறிப் பிடப்பட்டுள்ளது.

தற்போது மாரியம்மன் கோயில் நுழைவு வாயிலில் வண்டியூர் என்பது நீக்கப்பட்டு,  மாரியம்மன் கோயில் என பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது.

எனவே, மாநகராட்சி ஆவணங் களில் வண்டியூர் நீக்கப்பட்டதை ரத்து செய்து, மாரியம்மன் கோயில் முன்பு ‘அருள்மிகு வண்டியூர் மாரியம்மன் திருக்கோவில்’ எனப் பெயர் பலகை வைக்க உத்தரவிட வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி ஆகியோர் விசாரித்தனர்.

அறநிலையத் துறை சார்பில், வருவாய் ஆவணங்களிலும் ‘மாரியம்மன் கோவில்’ என்றே உள்ளது. இது தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்யாமல், மாநகராட்சி அறிவிப்பை எதிர்த்து மட்டும் மனுதாரர் வழக்கு தொடர்ந்துள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மனுவில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும், மனு தொடர் பாக அறநிலையத் துறை இணை ஆணையர் பதிலளிக்கவும் உத்தரவிட்டு விசாரணையை 4 வாரங்களுக்கு நீதிபதிகள் ஒத்தி வைத்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

49 mins ago

இந்தியா

19 mins ago

தமிழகம்

53 mins ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

கல்வி

3 hours ago

உலகம்

3 hours ago

மேலும்