கோவை, திருப்பூரில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் :

By செய்திப்பிரிவு

ராணுவ ஆயுத உற்பத்தி தொழிற்சாலைகளை தனியாருக்கு விற்பதை நிறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மத்திய அஞ்சல் அலுவலகம் முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு எம்எல்எஃப் மாவட்ட தலைவர் மு.தியாகராசன் தலைமை வகித்தார். ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் டி.எம்.மூர்த்தி பேசினார்.எல்பிஎஃப், ஐஎன்டியுசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐசிசிடியு, எஸ்டிடியு,ஏஐடியுசி,எம்எல்எஃப் ஆகியதொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.ஆர்ப்பாட்டத்தில், மத்திய அரசு அத்தியாவசிய பாதுகாப்பு சேவை அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.

அரசு சொந்தமாக உற்பத்தி செய்து வந்த ராணுவத்துக்கான ஆயுதங்கள், கருவிகளை தற்போது உள்நாட்டு, வெளிநாட்டு பெருநிறுவனங்கள் உற்பத்தி செய்வதற்கு 100 சதவீதம் அந்நிய நேரடி முதலீடு செய்யலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற தேச நலன்களுக்கு பேராபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக கைவிடவேண்டும். தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் காப்பீடு நிதி நிறுவனங்களை தனியாருக்கு விற்பதைகைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

திருப்பூர்

திருப்பூரில் அனைத்து தொழிற்சங்கங்கள் சார்பில் குமரன் சிலை முன்பு நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு ஹெச்.எம்.எஸ். மாவட்ட செயலாளர் முத்துசாமி தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர்கள என்.சேகர், (ஏ.ஐ.டி.யு.சி.), ரங்கராஜன் (சி.ஐ.டி.யு.) உட்பட பலர் பங்கேற்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்