டீசல் விலை உயர்வு எதிரொலி - சிவகங்கை அருகே தண்ணீர் பாய்ச்சாமல் விட்டதால் கருகிய நெற்பயிர்கள் :

By செய்திப்பிரிவு

சிவகங்கை அருகே டீசல் விலை உயர்வால் விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டதால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

சிவகங்கை அருகே அல்லூர் பனங்காடியில் 50-க்கும் மேற்பட்ட விவசாயிகள் 350 ஏக்கருக்கு மேல் கோடை நெல் சாகுபடி செய்துள்ளனர். அவர்களில் பலர், 16 ஆண்டுகளுக்கு முன்பு இலவச மின் இணைப்புக்கு விண்ணப்பித்தும், இதுவரை கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் டீசல் இன்ஜின் மோட்டார்களை பயன்படுத்தி நெற்பயிர்களை சாகுபடி செய்துள்ளனர்.

இந்நிலையில் டீசல் விலை ரூ.95-யை தாண்டியதால், விவசாயிகளால் டீசல் வாங்க முடியவில்லை. இதனால் தண்ணீர் பாய்ச்சாமல் அப்படியே விட்டுவிட்டதால் நெற்பயிர்கள் கருகி வருகின்றன.

இதுகுறித்து அப்பகுதி விவசாயி கருப்பையா கூறியதாவது: எனக்கு 2.5 ஏக்கர் உள்ளது. ஒரு லிட்டர் டீசல் ஊற்றினால் முக்கால் மணி நேரம் தான் மோட்டார் ஓடும். ஒரு ஏக்கருக்கு குறைந்தது 10 மணி நேரம் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். நெற்பயிருக்கு மூன்று நாட்களுக்கு ஒருமுறை பாய்ச்ச வேண்டும். இதனால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவே ரூ.1,200 தேவைப்படுகிறது.

அதனால் தண்ணீர் பாய்ச்சாமல் விட்டுவிட்டோம்.

மேலும் நான் 2005-ம் ஆண்டு இலவச மின்சாரத்துக்கு விண்ணப்பித்தேன். 16 ஆண்டுகளுக்கு மேலாகியும் இணைப்பு வழங்கவில்லை. தற்போது டீசல் விலை உயர்ந்து வருவதால் உடனடியாக இலவச மின் இணைப்பு கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்