பாரதிதாசன் பல்கலை.யில் முதுகலை பாலினவியல்: விண்ணப்பிக்க அழைப்பு :

By செய்திப்பிரிவு

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் முதுகலை பாலினவியல் படிப்புக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பல்கலைக்கழக மகளிரியல் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக முதுகலை பாலினவியல் படிப்பு நடத்தப்படுகிறது. இந்தப் படிப்புக்கு கலை, அறிவியல், சமூக அறிவியல், மேலாண்மை, சட்டம், பொறியியல் மற்றும் பிற பாடப் பிரிவுகளில் இளங்கலைப் பட்டம் பெற்ற அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

தேசிய ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கான தேர்வுகளுக்கு பல்கலைக்கழக நிதி நல்கைக் குழுவால் இந்தப் படிப்பு அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்தப் படிப்பு முடித்தவர்களுக்கு பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, இந்தப் படிப்புக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்கள் www.bdu.ac.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் காஜாமலை வளாகத்தில் உள்ள மகளிரியல் துறை இயக்குநரை dws@bdu.ac.in என்ற இ மெயில் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

வணிகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இணைப்பிதழ்கள்

5 hours ago

க்ரைம்

5 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

தமிழகம்

7 hours ago

உலகம்

7 hours ago

இந்தியா

9 hours ago

மேலும்