பள்ளிகளில் அதிக கட்டணம் வசூல் ஆட்சியரிடம் மாணவர் சங்கம் புகார் :

By செய்திப்பிரிவு

அதிக கல்விக் கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நாமக்கல் மாவட்ட ஆட்சியரிடம் இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் டி. சரவணன் தலைமையிலானோர் மனு அளித்தனர்.

அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள விவரம்:

கரோனா தொற்று காரணமாக மாணவர் நலன் கருதி அனைத்துப் பள்ளி, கல்லூரிகளும் மூடப்பட்டுள்ளன. இதனால் ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்தி வருகின்றனர். ஆன்லைன் கல்வி அனைவருக்கும் முறையாக கிடைப்பதில்லை. இந்நிலையில் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிப்பதற்கு தமிழக அரசு, உயர் நீதிமன்றம் வழங்கியுள்ள வழிகாட்டுதலுக்கு மாறாக முழு கட்டணமும் செலுத்தச் சொல்லி சில தனியார் பள்ளி, கல்லூரிகள் நிர்ப்பந்தம் செய்கின்றன. கல்விக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்பிலிருந்து வெளியேற்றி வருகின்றனர்.

மேலும், நடக்காத விடுதி, நீச்சல்குளம், யோகா, விளையாட்டு போன்ற பலவகை கட்டணங்களை வசூலிக்கின்றனர். கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள் அரசுப் பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் கேட்டாலும் கொடுக்க மறுக்கின்றனர்.

எனவே, மாவட்ட ஆட்சியர் கவனம் செலுத்தி அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

3 hours ago

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

தமிழகம்

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

ஆன்மிகம்

4 hours ago

கருத்துப் பேழை

5 hours ago

மேலும்