25 லட்சம் பேருக்கு தடுப்பூசி : சென்னை மாநகராட்சி அதிகாரி தகவல்

By செய்திப்பிரிவு

சென்னையில் இதுவரை 25 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரி தெரிவித்தார்.

சென்னையில் மாநகராட்சி சார்பில் பல்வேறு இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. தொடக்கத்தில் தடுப்பூசி போட்டுக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினர். இதையடுத்து, மாநகராட்சி சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இதனால் தடுப்பூசி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறும்போது, "சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி போடும் பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது ஏராளமானோர் தாமாக முன்வந்து கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்கின்றனர்.

சென்னையில் இதுவரை 25 லட்சத்து 36 ஆயிரத்து 383 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இனி வரும் நாட்களில் கரோனா தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கிறோம்" என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

உலகம்

3 mins ago

வணிகம்

9 mins ago

இந்தியா

19 mins ago

இந்தியா

29 mins ago

இந்தியா

36 mins ago

இந்தியா

43 mins ago

இந்தியா

52 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

கருத்துப் பேழை

1 hour ago

சினிமா

3 hours ago

மேலும்