பள்ளி அருகே மதுக்கடை திறப்பதா? : கடைக்கு பூட்டுப் போட முயற்சி - போலீஸாருடன் தள்ளுமுள்ளு

By செய்திப்பிரிவு

பள்ளி அருகே மதுக்கடை திறக்க வழங்கப்பட்ட அனுமதியை கண்டித்து, கடைக்கு பூட்டு போட முயன்று போராட்டம் நடந்தது. இதில் கடையின் ஷட்டரை மூடியவர்களை போலீஸார் தடுத் ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

புதுவை பழைய சட்டக்கல்லூரி அருகே புதிதாக மதுபான கடைஅமைக்க கலால்துறை அனுமதியளித்துள்ளது. சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி இதன் அருகே உள்ளது. மேலும் நகர பகுதியில் அரசு அலுவலகங்கள், குடியிருப்புகளுக்கு மத்தியில் இந்த மதுக்கடை அமைக்கப்பட்டுள்ளது. இதனால் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இந்த மதுக்கடையை அகற்றக்கோரி தமிழர்களம் அமைப்பு சார்பில் கடைக்கு பூட்டுபோடும் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இதன்படி சுப்பிரமணிய பாரதியார் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே தமிழர்களம் மற்றும் சமூக அமைப்புகளை சேர்ந்தவர்கள் திரண்டனர்.

தமிழர்களம் அழகர் தலைமையில் திராவிடர் விடுதலை கழகம்அய்யப்பன், மக்கள் உரிமை கூட்டமைப்பு சுகுமாரன், பெற்றோர் ஆசிரியர் சங்கம் நாராயணசாமி, அம்பேத்கர் தொண்டர் படை பாவாடைராயன், தமிழ் எழுத்தாளர் கழகம் தமிழ்நெஞ்சன், தமிழ் தேசிய இயக்கம் வேல்சாமி, தேசிய இளைஞர் முன்னணி கலைபிரியன் மற்றும் பலர் கண்டன கோஷத்துடன் மதுபானக் கடையை நெருங்கி பூட்டுப் போட முயன்றனர்.

போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் இருதரப்புக்கும் தள்ளு முள்ளுஏற்பட்டது. மதுக் கடையின் ஷட்டரை இழுத்து மூடினர்.

ஊரடங்கையொட்டி மதுக்கடை யில் வரிசையாக நிற்க கட்டியிருந்த கட்டைகளை பிரித்து எறிந்து, சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.

போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து போராட் டத்தை கைவிட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக புஸ்ஸி வீதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

40 mins ago

விளையாட்டு

31 mins ago

தமிழகம்

55 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

இந்தியா

2 hours ago

ஆன்மிகம்

2 hours ago

மேலும்