மேட்டுப்பாளையம் ஆதரவற்றோர் மையத்துக்கு : விரைவில் மனநல மருத்துவரை நியமிக்க முடிவு :

By செய்திப்பிரிவு

மேட்டுப்பாளையம் பழைய நகராட்சி அலுவலக கட்டிடத்தில், ஆதரவற்றோர் மீட்பு மற்றும் பராமரிப்பு மையம் செயல்பட்டு வருகிறது. மாவட்ட ஆட்சியரின் கண்காணிப்பில், தனியார் மூலம் இம்மையம் பராமரிக்கப்பட்டு வருகிறது. இம்மையத்தின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம் கோவையில் நேற்று நடைபெற்றது.

கூட்டத்தில், ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் பேசும்போது,‘‘ஆதரவற்றோர்கள், மாற்றுத்திறனாளிகள், சாலையோரம் வசிப்போர் உள்ளிட்டவர்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் வகையில் இந்த மையம் செயல்படுகிறது. இங்கு அனுமதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு மனநலம் சார்ந்த மருத்துவம், பொது மருத்துவம், சர்க்கரை, ரத்தஅழுத்தம் உள்ளிட்ட பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதுடன், அவர்களுக்கான இணை நோய்கள் தொடர்பாகவும் பரிசோதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இப்பணிகளை மேற்கொள்ள நிர்வாக அலுவலர், செவிலியர்கள், சமூக ஆர்வலர்கள், மனநல சிறப்பு கவனிப்பாளர்கள் என 13 பேர் 24 மணி நேரமும் அங்கேயே தங்கியிருந்து பணியாற்றி வருகின்றனர். மேலும், மனநல மருத்துவர்கள், ஆலோசகர்கள், செவிலியர்கள் உள்ளிட்டோரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’’ என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

இந்தியா

37 mins ago

சினிமா

54 mins ago

வலைஞர் பக்கம்

1 hour ago

கல்வி

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

ஓடிடி களம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

13 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

சுற்றுலா

2 hours ago

மேலும்