மக்களை அடிமைபோல் நடத்தும் ஊராட்சி தலைவர்கள் : உயர் நீதிமன்றம் கண்டனம்

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை மாவட்டம் ராங்கியன்விடுதி ஊராட்சித் தலைவர் சுமதி, உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு:

ராங்கியன்விடுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக நெல் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. தற்போது அறுவடை சீசன் தொடங்கியுள்ளது. இந்நிலையில் ராங்கியன்விடுதி அரசு நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க அதிகாரிகள் மறுத்து வருகின்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ராங்கியன்விடுதி நெல் கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனு, நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசு வழக்கறிஞர் வாதிடுகையில், மாரியம்மன் கோயில் எதிரே உள்ள அரசு புறம்போக்கு இடத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதையடுத்து, மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சித் தலைவர்கள் தங்களை எஜமானர்கள் போலவும், மக்களை அடிமை போலவும் நினைத்து நடத்தும் போக்கு சரியல்ல. யாராக இருந்தாலும் மக்கள் நலனே முக்கியம். மாவட்ட ஆட்சியர் அமைத்த 3 பேர் குழு தேர்வு செய்த மாரியம்மன் கோயில் எதிரே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நெல் கொள்முதல் நிலையம் செயல்பட அனுமதி வழங்கப்படுகிறது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கல்வி

5 mins ago

உலகம்

54 mins ago

தமிழகம்

1 hour ago

கல்வி

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்