ஜூன் 21-ல் காந்தி மார்க்கெட் மீண்டும் திறப்பு - கரோனா தடுப்பூசி போடாத வியாபாரிகளுக்கு அனுமதி இல்லை : மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு தகவல்

By செய்திப்பிரிவு

திருச்சி கலையரங்க மண்டபத்தில் நேற்று நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா தடுப் பூசி போடும் முகாமை ஆட்சியர் சு.சிவராசு ஆய்வு செய்தார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியது: தமிழகத்திலேயே தடுப்பூசி போடுவதில் 6-வது இடத்தில் திருச்சி மாவட்டம் உள்ளது. இதுவரை மொத் தம் 4.05 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

காந்தி மார்க்கெட் வியாபாரிகள் 2,800 பேரில் ஏற்கெனவே 2,300-க்கும் அதிகமானோர் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.

மொத்த வியாபாரத்துக்காக காந்தி மார்க்கெட் ஜூன் 21-ம் தேதி திறக்கப்படவுள்ள நிலையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் கடைகளைத் திறக்க அனுமதி அளிக்கப்படாது.

அடுத்த வாரம் முதல் திருச்சி மாநகரில் 4 கோட்டங்களிலும் தினமும் ஒரு வார்டு என்ற அடிப்படையில் பள்ளி வளாகத்தில் கரோனா தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். இதன்மூலம் மக்களுக்கு அலைச்சல் தவிர்க்கப் படும் என்றார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 mins ago

தமிழகம்

14 mins ago

இந்தியா

7 mins ago

விளையாட்டு

23 mins ago

வாழ்வியல்

32 mins ago

ஓடிடி களம்

42 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

தொழில்நுட்பம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்