27 மாவட்டங்களில் டாஸ்மாக் திறப்பு :

By செய்திப்பிரிவு

கரோனா பரவல் காரணமாக மாநிலம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகள் மூடப்பட்டன. பல்வேறு மாவட்டங்களில் தொற்று குறைந்து வரும் நிலையில் 27 மாவட்டங்களில் கடந்த 7-ம் தேதி முதல் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டன.

சென்னை உள்ளிட்ட 27 மாவட்டங்களில் டாஸ்மாக் மதுக்கடைகளை காலை 10 முதல்மாலை 5 மணி வரை திறக்கஅரசு அனுமதித்தது. அதேசமயம், தொற்று குறையாத 11 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின்படி நேற்று27 மாவட்டங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்டன. 21 நாட்களுக்குப் பிறகு கடைகள் திறக்கப்பட்டதால், பலர் காலை முதலேநீண்டவரிசையில் காத்திருந்து மதுபானம் வாங்கிச் சென்றனர்.

பெரும்பாலான கடைகள்முன்பு தடுப்புகள் அமைக்கப்பட்டு, சமூக இடைவெளியுடன் மது வாங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுவை வாங்கிய சிலர், கற்பூரம் ஏற்றி வணங்கிய பின்னர், மதுவை அருந்தினர். மதுக்கடைகள் திறக்கப்படாத 11 மாவட்டங்களுக்கு அருகில்உள்ள, பிற மாவட்ட மதுக் கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் வந்ததால், அங்கு காலையிலேயே மது விற்றுத் தீர்ந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

2 hours ago

சினிமா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

விளையாட்டு

5 hours ago

இந்தியா

5 hours ago

இந்தியா

5 hours ago

தமிழகம்

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

6 hours ago

ஆன்மிகம்

5 hours ago

கருத்துப் பேழை

6 hours ago

மேலும்