ஜிப்மரில் நர்சிங், துணை மருத்துவ : படிப்புக்கு நீட் முறையில் தேர்வு :

By செய்திப்பிரிவு

ஜிப்மரில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புக்கான சேர்க்கை நீட் மதிப்பெண் அடிப்படையில் இக்கல்வியாண்டு முதல் நடக்க உள்ளது. தனியாக நுழைவுத்தேர்வை ஜிப்மர் நடத்தாது. அதேநேரத்தில் கலந்தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். அதில் பங்கேற்க ஜிப்மர் இணையத்தில் தனியாக பதிவு செய்ய வேண்டும்.

புதுச்சேரியில் உள்ள மத்திய அரசின் ஜவஹர்லால் மருத்துவ பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தில் (ஜிப்மர்) எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், எம்டிஎஸ், பிஎஸ்சி, எம்எஸ்சி, பிஎச்டி மற்றும் மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன. ஜிப்மரில் எம்பிபிஎஸ் சேர்க்கைக்கு தனியாக நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. கடந்தாண்டு முதல் இந்த நுழைவுத் தேர்வு ரத்தாகி, நீட் கலந்தாய்வு முறையில் சேர்க்கை முறை அமலானது. அதேபோல் நர்சிங் மற்றும் மருத்துவம் சார்ந்த இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புகளான பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்பிஎச், பிஜிடி, பிஜிஎப், பிபீடி மற்றும் பிஎச்டி படிப்புகளுக்கு ஜிப்மர் நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கை நடத்தி வந்தது.

இந்நிலையில் இக்கல்வியாண்டில் பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவ படிப்புகள் (Bsc Nursing And Allied Health Science Courses) நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடைபெறவுள்ளது. இதுபற்றி ஜிப்மர் தரப்பில் விசாரித்தபோது, “2021-ம் ஆண்டு பிஎஸ்சி நர்சிங் மற்றும் துணை மருத்துவப் படிப்புக்கான சேர்க்கை நீட் (யூஜி) அடிப்படையில் இருக்கும். பிஎஸ்சி படிப்புகளுக்கு ஜிப்மரில் தனியாக நுழைவுத்தேர்வு நடத்தப்படாது. அதே நேரத்தில் இப்படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். தனியாக ஜிப்மர் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும். இதுதொடர்பான விவரங்கள் இணையத்தில் பகிரப்படும். ஜிப்மர் இணையதள முகவரி www.jipmer.edu.in” என்று தெரிவித்தனர்.

அதே நேரத்தில் இப்படிப்புகளுக்கான கலந்தாய்வை ஜிப்மர் தனியாக நடத்தும். தனியாக ஜிப்மர் இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

க்ரைம்

16 mins ago

ஜோதிடம்

14 mins ago

தமிழகம்

12 mins ago

தமிழகம்

19 mins ago

இந்தியா

23 mins ago

சினிமா

47 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

31 mins ago

ஓடிடி களம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்