சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழகம் முழுவதும் குறுங்காடு அமைக்கப்படும்: அமைச்சர் தகவல் :

By செய்திப்பிரிவு

புதுக்கோட்டை: சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்காக தமிழகம் முழுவதும் குறுங்காடுகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்தார்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடுவதற்காக நேற்று கல்லூரி நிர்வாகத்திடம் 500 மரக்கன்றுகளை வழங்கிய பின்னர், செய்தியாளர்களிடம் அவர் கூறியது: சுற்றுச்சூழல் அதிகமாக மாசுபட்டுள்ளதால் மரங்களை அதிகமாக நடவேண்டும். எனவே, தமிழகம் முழுவதும் குறுங்காடுகள் அதிக எண்ணிக்கையில் அமைக்கப்பட உள்ளன. இவற்றை பராமரிப்பதற்குத் தேவையான பணியாளர்கள் நியமிக்கப்படுவதுடன், தண்ணீர் வசதியும் ஏற்படுத்தப்படும் என்றார்.

இதைத்தொடர்ந்து, ஆலங்குடியில் வீடுவீடாக சென்று ஆக்‌ஸி மீட்டர், தெர்மல் ஸ்கேனர் மூலம் பேரூராட்சி பணியாளர்கள் பரிசோதனை செய்து வருவதை அமைச்சர் மெய்யநாதன் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் பெ.வே.சரவணன், மருத்துவக் கல்லூரி முதல்வர் எம்.பூவதி, திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவர் வள்ளியம்மை, பேரூராட்சி செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

7 mins ago

தமிழகம்

59 mins ago

விளையாட்டு

16 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

22 mins ago

இந்தியா

27 mins ago

கருத்துப் பேழை

3 hours ago

இந்தியா

34 mins ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

2 hours ago

தமிழகம்

3 hours ago

மேலும்