திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயில் - ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு :

By செய்திப்பிரிவு

திருவெறும்பூர் எறும்பீஸ்வரர் கோயிலில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட் டுள்ளது.

திருச்சியைச் சேர்ந்த கேசவன் உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: திருச்சி திருவெறும்பூரில் 600 அடி உயர மலையின் உச்சியில் 7-ம் நூற்றாண்டில் சோழ மன்னர்களால் கட்டப்பட்ட எறும்பீஸ்வரர் கோயில் உள்ளது. தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயில் உரிய பராமரிப்பு இல்லாமல் உள்ளது.

கோயிலுக்குச் சொந்தமான சொத்துகள் பலரின் ஆக்கி ரமிப்பில் உள்ளன. தெப்பக் குளமும் முறையாக பராமரிக்கப் படவில்லை. கோயில் அமைந்தி ருக்கும் மலையைச் சுற்றியுள்ள பகுதிகளை ஆக்கிரமித்து வீடுகள், வணிக வளாகங்கள் கட்டப்பட்டுள்ளன. எனவே, எறும்பீஸ்வரர் கோயிலை புனர மைக்கவும், கோயில் மலை மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்து, தொல்லியல்துறை கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கையை அற நிலையத்துறை கண்காணிப் பாளர் கண்காணிக்க வேண்டும். கோயிலில் தேரோட்டம் நடத்து வதற்கான சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தர விட்டது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

3 hours ago

இந்தியா

6 mins ago

கருத்துப் பேழை

2 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

தொழில்நுட்பம்

10 hours ago

சினிமா

11 hours ago

க்ரைம்

11 hours ago

விளையாட்டு

11 hours ago

மேலும்