மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஒரே மாதத்தில் - கரோனா பாதித்த 87 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் :

By செய்திப்பிரிவு

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் கடந்த மாதம் கரோனா பாதித்த 87 கர்ப்பிணிகளை குணப்படுத்தி அவர்களுக்கு பாதுகாப்பான முறையில் பிரசவம் பார்க்கப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் கரோனா தொற்று குறைந்தாலும் பரவல் குறையவில்லை. இந்த நெருக்கடியான காலத்திலும் கர்ப்பிணிகள் மாதாந்திர பரிசோ தனைக்காக மருத்துவமனைக்கு செல்ல வேண்டி உள்ளது. இவ்வாறு சிகிச்சைக்குச் செல்லும் கர்ப்பிணிகளில்சிலருக்கு கரோனா தொற்று ஏற்படுவது அதிகரித்தது. அவர்களுக்கு அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு முதல் அலையில் கரோனா பாதித்த 400 கர்ப்பிணிகளுக்கு அரசு மருத்துவர்கள் பிரசவம் பார்த்தனர். தற்போது 2-வது அலையிலும் கரோனா பாதித்த 360 கர்ப்பிணிகள் அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அவர்களில் இதுவரை 110 பேர் பிரசவம் முடிந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இதில் கடந்த மாதம் மட்டும் கரோனா பாதித்த 87 கர்ப்பிணிகளுக்கு பிரசவம் நடந்துள்ளது. இவர்களுக்கான கரோனா வார்டில் 27 கர்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சுற்றுச்சூழல்

1 min ago

சுற்றுலா

13 mins ago

தமிழகம்

44 mins ago

சுற்றுலா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஆன்மிகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

7 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்