ரேஷன் கடைகளில் மளிகை பொருட்கள் வழங்க பைகள் தயாரிக்கும் பணி தீவிரம் :

By செய்திப்பிரிவு

நாமக்கல்: கரோனா ஊரடங்கு காரணமாக தமிழக அரசு பொதுமக்களுக்கு ரேஷன் கடைகள் மூலமாக மளிகைப் பொருட்கள் கொண்ட தொகுப்பு வழங்க உள்ளது. இதற்கான பைகள் தயாரிக்கும் பணி குமாரபாளையத்தில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. பையின் ஒரு பக்கம் தமிழக அரசு முத்திரை, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கரோனா சிறப்பு நிவாரண பொருட்கள், நம்மையும், நாட்டு மக்களையும் காப்போம், தொற்றில் இருந்து தமிழகத்தை மீட்போம், என்ற வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.

பையின் மற்றொரு பக்கத்தில் சர்க்கரை 500 கிராம், கோதுமை மாவு ஒரு கிலோ, உப்பு ஒரு கிலோ, ரவை ஒரு கிலோ, உளுத்தம் பருப்பு 500 கிராம், புளி 250 கிராம், கடலை பருப்பு 250 கிராம், டீ தூள் 200 கிராம், கடுகு 100 கிராம், சீரகம் 100 கிராம், மஞ்சள் தூள் 100 கிராம், மிளகாய் தூள் 100 கிராம், குளியல் சோப்பு ஒன்று, துணை சோப்பு ஒன்று என தொகுப்பில் இடம்பெற்றுள்ள பொருட்களின் விவரம் அச்சிடப்பட்டுள்ளது. இப்பைகள் தயாரிக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கப்படும், என பை தயாரிப்பு பணி மேற்கொள்ளும் நிறுவனத்தினர் தெரிவித்தனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

24 mins ago

இந்தியா

5 hours ago

வாழ்வியல்

6 hours ago

இந்தியா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

சினிமா

9 hours ago

இந்தியா

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்