கடலூரில் கரோனாவுக்கு சித்த மருத்துவ சிகிச்சை மையம் திறப்பு :

By செய்திப்பிரிவு

கடலூர்: கடலூரில் சித்த மருத்துவ மையத்தினை வேளாண்-உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் தலைமையில் திறந்து வைத்தனர்.

இதுகுறித்து அமைச்சர்கள் கூறியது: கடலூர் அரசு பெரியார் கலைக்கல்லூரியில் 100 படுக்கை வசதிகளுடன் சித்த மருத்துவத்துடன் கூடிய கரோனா சிகிச்சை மையம் தொடங்கப்பட்டு 7 வகையான சித்த மருந்துகள் வழங்கப்படுகின்றன. காலை, மாலை இருவேளையும் கஷாயம் மற்றும் மூலிகை தேநீர்,மூலிகை சிற்றுண்டி, மதியம் மூலிகைகள் சேர்ந்த உணவு மற்றும் சீரக கஞ்சி, சுக்கு காபி, சிறுதானிய சுண்டல் வழங்கப்படுகிறது. மூச்சு பயிற்சி,யோகா பயிற்சி அளிக்கப்பட்டு சித்த மருத்துவரின் மனநல ஆலோசனையும் வழங்கப்படுகிறது என்று தெரிவித்தனர். இதை தொடர்ந்து கடலூர் டவுன்ஹாலில் 8 அரசு மருத்துவமனைகளின் பயன்பாட்டிற்கு வழங்கிட 57 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கினர். மாவட்ட வருவாய் அலுவலர் அருண்சத்யா, திட்ட இயக்குநர் மகேந்திரன், சித்த மருத்துவ அலுவலர் ராஜகுமாரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

9 mins ago

சினிமா

50 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

3 hours ago

வாழ்வியல்

3 hours ago

தமிழகம்

3 hours ago

ஆன்மிகம்

3 hours ago

கருத்துப் பேழை

4 hours ago

மேலும்