ஊரடங்கு விதிகளை மீறியதாக 680 பேர் மீது வழக்குப்பதிவு :

By செய்திப்பிரிவு

வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் ஊரடங்கு காலத்தில் விதிகளை மீறி சுற்றியதாக 680 பேர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் ஞாயிற்றுக்கிழமையன்று முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. இதையடுத்து, காவல் துறையினர் ஞாயிற்றுக்கிழமைகளில் கண்காணிப்பு பணியை அதிகரித்ததுடன் விதிகளை மீறி வாகனங்களில் வெளியில் சுற்றுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து வழக்குப்பதிந்துள்ளனர்.

அதன்படி, ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமையான நேற்று முன்தினம் காவல் துறையினர் நடத்திய வாகனத் தணிக்கையில் முகக்கவசம் அணியாமல், வாகனங்களில் சென்றவர்கள் என 250 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதேபோல், வேலூர் மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் சென்றது, இரு சக்கர வாகனங்களில் அவசியம் இல்லாமல் சுற்றியதாக 430 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

18 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இலக்கியம்

8 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

3 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

இந்தியா

4 hours ago

மேலும்