போக்சோ வழக்கில் தேடப்பட்டவர் தற்கொலை :

By செய்திப்பிரிவு

கோவை செட்டிபாளையம் திருவள்ளுவர் நகர் அருகே தூக்கில் தொங்கிய நிலையில், ஆண் சடலம் கிடப்பதாக செட்டிபாளையம் போலீஸாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. போலீஸார் சென்று சடலத்தை மீட்டனர். விசாரணையில், இறந்தவர் க.க.சாவடி காமராஜபுரத்தைச் சேர்ந்த மணி(60) என்பது தெரியவந்தது.

போலீஸார் கூறும்போது,‘‘கடந்த ஏப்ரல் மாதம் 4 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பான புகாரில், பேரூர் அனைத்து மகளிர் போலீஸார், போக்சோ பிரிவின் கீழ் மணி மீது வழக்கு பதிவு செய்து தேடிவந்தனர். இதை அறிந்த மணி தலைமறைவானார். இந்நிலையில், தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார்’’ என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

32 mins ago

இந்தியா

49 mins ago

தமிழகம்

35 mins ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

வணிகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

1 hour ago

மாவட்டங்கள்

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்