காய்கறி, மளிகைப் பொருள் வாங்குவதற்காக - தினசரி வெளியில் செல்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் : மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தல்

By செய்திப்பிரிவு

முழு ஊரடங்கு நாட்களில் காய்கறிகள் உள்ளிட்ட அத்தியாவ சியப் பொருட்கள் வாங்க பொதுமக்கள் நாள்தோறும் வெளியில்செல்வதை தவிர்க்க வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரித்துவரும் கரோனா பரவலை கட்டுப்படுத்த மே 24-ம்தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

இருப்பினும், பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க காய்கறி, மளிகை, தேநீர் கடைகள், பால் விற்பனை மற்றும் உணவகங்களில் பார்சலுக்கு அனுமதி உள்ளிட்ட சில தளர்வு கள் அளிக்கப்பட்டுள்ளன.

இருப்பினும், பகல் 12 மணி வரை அத்தியாவசியப் பொருட்கள் வாங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை பலரும் தவறாக பயன்படுத்திக் கொண்டு, பொதுவெளியில் தேவையில் லாமல் சுற்றி வருவதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “காய்கறிகள், மளிகைப் பொருட்களை வாரத்தில் ஒரு நாள் என்ற அடிப்படையில் பொதுமக்கள் வாங்கி வைத்துக் கொள்வது நல்லது.

தளர்வுகளை தவறாக பயன்படுத்தும் வகையில், தினசரி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். மீறுவோர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள்” என்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

9 mins ago

தமிழகம்

31 mins ago

தமிழகம்

36 mins ago

தமிழகம்

38 mins ago

இந்தியா

1 hour ago

சுற்றுச்சூழல்

39 mins ago

சினிமா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

மேலும்