தனியார் பாலிடெக்னிக்கில் 150 படுக்கைகளுடன் கரோனா மையம் :

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி அருகே தருவையில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் 150 படுக்கைகளுடன் கரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி மாவட்டத்தில் நாளொன்றுக்கு 700 பேர் வரைகரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் 1,240 படுக்கைகள் உள்ளது. அதில் 800 படுக்கைகளுக்கு ஆக்சிஜன் வசதி இருக்கிறது. அதிக பாதிப்பு உள்ளவர்கள் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். ஓரளவுக்கு பாதிப்பு உள்ளவர்கள் கூடங்குளம் அரசுமருத்துவமனை, பாளையங்கோட்டை அரசு சித்த மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகிறார்கள். இதுதவிர மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் கரோனா சிகிச்சை மையங்களை அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

திருநெல்வேலி மாநகராட்சி சார்பில் மகாராஜநகர் மாநகராட்சி திருமண மண்டபத்தில் கரோனா சிகிச்சை மையம் அமைக்கும் பணிநடைபெற்று வருகிறது. இப்பணிகளை மாநகர நல அலுவலர் சரோஜா, மண்டல உதவி ஆணையர் பிரேம் ஆனந்த், சுகாதார ஆய்வாளர் நடராஜன் உள்ளிட்டோர் ஆய்வு செய்தனர். திருநெல்வேலிஅருகே தருவையிலுள்ள தனியார்பாலிடெக்னிக் கல்லூரியில் கரோனா சிகிச்சை மையம் 150 படுக்கைகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் வே. விஷ்ணு நேற்று பார்வையிட்டார்.

வி.கே.புரத்தில் அபராதம்

வி.கே.புரம் நகராட்சிக்கு சொந்தமான தினசரி சந்தையில் சமூக இடைவெளி கடைபிடிக்கப்படாதது குறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தன. நகராட்சி அலுவலர்கள் அங்கு சென்று சமூக இடைவெளியை கடைபிடிக்காத வியாபாரிகளுக்கு அபராதம் விதித்தனர். புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில் அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி பகுதிகளில் பேருந்துகள், வாகனங்களில் போக்குவரத்து துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

55 mins ago

சினிமா

3 mins ago

விளையாட்டு

17 mins ago

சினிமா

26 mins ago

உலகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

உலகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

தமிழகம்

2 hours ago

மேலும்