அம்பாசமுத்திரத்தில் 8மி.மீ. மழை : சிவலோகத்தில் 29 மி.மீ., பதிவு

By செய்திப்பிரிவு

திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பரவலாக நேற்று மழை பதிவானது. அம்பாசமுத்திரத்தில் நேற்று காலை நிலவரப்படி 8 மி.மீ. மழை பதிவாகியிருந்தது.

143 அடி உச்சநீர்மட்டம் கொண்ட பாபநாசம் அணை நீர்மட்டம் 102.60 அடியாக இருந்தது. அணைக்கு 16.69 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 253.50 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது. 118 அடி உச்சநீர்மட்டம் கொண்ட மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 88.75 அடியாக இருந்தது. 2 கனஅடிதண்ணீர் வந்து கொண்டிருந்தது. 250 கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்டிருந்தது.

மற்ற அணைகளின் நீர்மட்டம் (அடைப்புக்குள் உச்சநீர்மட்டம்): சேர்வலாறு- 115.55 அடி (156 அடி),வடக்குபச்சையாறு- 42.85 அடி (50 அடி), நம்பியாறு- 12.53 அடி (22.96 அடி), கொடுமுடியாறு- 5 அடி(52.25 அடி). நேற்று மதியத்துக்குப் பின் திருநெல்வேலி புறநகர்ப்பகுதிகளில் லேசான மழை பெய்தது.

தென்காசி

தென்காசி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக கோடை மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவும் பல்வேறு பகுதிகளில் இடி, மின்னலுடன் மழை பெய்தது. நேற்று காலை 8 மணி வரை 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தென்காசியில் 70.40 மி.மீ. மழை பதிவானது. ஆய்க்குடியில் 6.20 மிமீ, குண்டாறு அணையில் 2, செங்கோட்டை, சிவகிரியில் தலா1 மி.மீ. மழை பதிவானது. நேற்று மதியம் பாவூர்சத்திரம், கடையம், சுரண்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை பெய்யாதால் அணைகளில் தொடர்ந்து நீர்மட்டம் குறைந்து வருகிறது. ஏற்கெனவே, அடவிநயினார் அணை வறண்டுவிட்டது. கடனாநதி அணை நீர்மட்டம் 67 அடியாகவும், ராமநதி அணை நீர்மட்டம் 57.25 அடியாகவும், கருப்பாநதி அணை நீர்மட்டம் 50.20 அடியாகவும், குண்டாறு அணை நீர்மட்டம் 28.50 அடியாகவும் இருந்தது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

50 mins ago

ஜோதிடம்

56 mins ago

விளையாட்டு

4 hours ago

வணிகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

தொழில்நுட்பம்

7 hours ago

சினிமா

8 hours ago

க்ரைம்

8 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

9 hours ago

மேலும்