வெளிமாநிலத் தொழிலாளர்களுக்கு உதவ நாமக்கல், ஈரோட்டில் கட்டுப்பாட்டு அறை :

By செய்திப்பிரிவு

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் பணிபுரியும் வெளி மாநிலத் தொழிலாளர்களுக்கு, கரோனா தொற்று காலத்தில் உதவிகள் மேற்கொள்ள தொழிலாளர் நலத்துறை மூலம் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஈரோடு மாவட்டத்தில் பணிபுரியும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், ஈரோடு மாவட்ட தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) டி.பாலதண்டாயுதம் (86107 11278), தொழிலாளர் துணை ஆய்வாளர் சி.ப.முருகேசன் (63800 21835), தொழிலாளர் உதவி ஆய்வாளர் ந.சங்கரன் (90470 12425) மற்றும் தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை (0424 2270090) தொடர்பு கொண்டு தேவையான உதவிகளைப் பெறலாம் என ஈரோடு தொழிலாளர் உதவி ஆணையர் டி.பாலதண்டாயுதம் தெரிவித்துள்ளார்.

இதேபோல், நாமக்கல் மாவட்டத்தில் பணி புரியும் புலம் பெயர் தொழிலாளர்கள் தங்கள் புகார்கள் மற்றும் உதவிகளைப் பெறுவதற்கு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி, தொழிலாளர் நலத்துறை நாமக்கல் உதவி ஆய்வாளரை 9894109675 என்ற எண்ணிலும், திருச்செங்கோடு உதவி ஆய்வாளரை 9486020461 என்ற எண்ணிலும், நாமக்கல் உதவி ஆணையரை 8778431380 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவிகளைப் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

4 hours ago

சினிமா

5 hours ago

இந்தியா

6 hours ago

தமிழகம்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

7 hours ago

இந்தியா

7 hours ago

தமிழகம்

7 hours ago

வாழ்வியல்

8 hours ago

தமிழகம்

8 hours ago

ஆன்மிகம்

7 hours ago

கருத்துப் பேழை

8 hours ago

மேலும்