பராமரிப்பு பணியால் : மின்சார ரயில் சேவையில் இன்று மாற்றம் :

By செய்திப்பிரிவு

தாம்பரம் அருகே தண்டவாள பராமரிப்புப் பணி நடக்கவுள்ளதால், இந்த தடத்தில் மின்சார ரயில் சேவையில் இன்று சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

சென்னை எழும்பூர் - செங்கல்பட்டு தடத்தில் தாம்பரம் - வண்டலூர் ரயில் நிலையங்களுக்கு இடையே இன்று பராமரிப்பு பணிகள் நடக்கவுள்ளன. இதனால், இந்த தடத்தில் மின்சார ரயில்களின் சேவையில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை கடற்கரை - செங்கல்பட்டு காலை 11 மணி ரயிலின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு, தாம்பரம் வரை மட்டுமே இயக்கப்படும். அதேபோல், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை மதியம் 1.15 மணி ரயிலின் சேவையில் ஒரு பகுதி ரத்து செய்யப்பட்டு தாம்பரம் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

12 mins ago

இந்தியா

8 mins ago

இந்தியா

14 mins ago

தமிழகம்

28 mins ago

தமிழகம்

22 mins ago

இந்தியா

54 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

58 mins ago

தமிழகம்

1 hour ago

மேலும்