மதுரை மாவட்டத்தில் கோவேக்சின் தடுப்பூசி தட்டுப்பாடு : ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் மக்கள்

By செய்திப்பிரிவு

மதுரை மாவட்டத்தில் கோவேக் சின் தடுப்பூசி போதிய அளவில் இருப்பில் இல்லை.

கரோனா பரவலைத் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்ள மத்திய, மாநில அரசுகள் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றன.

கடந்த மாதம் வரை 45 வய துக்கு மேற்பட்டவர்களுக்கு மட் டுமே தடுப்பூசி செலுத்தப்பட்ட நிலையில், நேற்று முதல் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், போதிய தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் இல்லாததால் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தற்போது தடுப்பூசி போடப்பட வில்லை.

மதுரை மாவட்டத்தில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்த முடியாத அளவுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அரசு ராஜாஜி மருத்துவ மனை சார்பில் மாநகராட்சி இளங்கோ மேல்நிலைப் பள்ளி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த மாதம் கோவிசீல்டு தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. அதனால், அந்த தடுப்பூசி 2-வது டோஸ் போட வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்.

நேற்று முதல் கோவேக்சின் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற் பட்டுள்ளது. எனவே, முதல் டோஸ் தடுப்பூசிக்காக வருபவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். சில மையங்களில் மட்டும் 2-வது டோஸ் போட்டுக்கொள்ள வரு பவர்களுக்கு தடுப்பூசி செலுத் தப்படுகிறது.

தடுப்பூசி மைய அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எங்களுக்கு கோவேக்சின் 2-வது டோஸ் மட்டும் போட உயர் அதிகாரிகள் வாய்மொழி உத்தரவிட்டுள்ளனர். முதல் டோஸ் போட போதிய தடுப்பூசி டோஸ்கள் இருப்பில் இல்லை’’ என்று கூறினர்.

மாவட்ட சுகாதாரத்துறை தடுப்பூசி போதிய அளவு இருப்பில் இருப்பதாகக் கூறி, ஒருபுறம் பொதுமக்களை தடுப்பூசி செலுத்திக் கொள்ள அழைப்பு விடுக்கிறது. மறுபுறம் தடுப்பூசி செலுத்த வருபவர்களை தடுப்பூசி இல்லை எனக் கூறி திருப்பி அனுப்புகிறது. இதனால் பொதுமக்கள் வீண் அலைச் சலுக்கு ஆளாகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

27 mins ago

ஜோதிடம்

32 mins ago

விளையாட்டு

4 hours ago

தமிழகம்

5 hours ago

விளையாட்டு

6 hours ago

வாழ்வியல்

6 hours ago

தமிழகம்

7 hours ago

விளையாட்டு

8 hours ago

தமிழகம்

9 hours ago

ஓடிடி களம்

9 hours ago

இந்தியா

9 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்