கரோனா தடுப்பு விதிமுறை மீறிய 3 ஜவுளிக் கடைகளுக்கு ‘சீல்’ :

By செய்திப்பிரிவு

சேலம்: சேலத்தில் கரோனா விதிகளை மீறி செயல்பட்ட 3 ஜவுளிக் கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.

சேலம் 4 ரோடு அருகே உள்ள 3 ஜவுளிக் கடைகளில் பின்வாசல் வழியாக வாடிக்கையாளர்களை அனுமதித்து, விற்பனை செய்து வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, சூரமங்கலம் மண்டல உதவி ஆணையர் ராம்மோகன் தலைமையிலான மாநகராட்சி அதிகாரிகள் 4 ரோடு பகுதியில் உள்ள ஜவுளிக் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, 3 கடைகளில் வாடிக்கையாளர்கள் கூட்டமாக இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அனைவரையும் கடையில் இருந்து அதிகாரிகள் வெளியேற்றினர். தொடர்ந்து அரசு உத்தரவை மீறி பின்வாசல் வழியாக செயல்பட்ட கடை நிர்வாகிகளை அதிகாரிகள் கடுமையாக எச்சரித்ததோடு தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர். மேலும், கடையை பூட்டி சீல் வைத்தனர்.

தொடர்ந்து மாநகராட்சி அதிகாரிகள் 3 ஆயிரம் சதுரடிக்கு மேல் உள்ள கடைகள் இயங்குகிறதா என்பது தொடர்பாக ஆய்வுப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

26 mins ago

இந்தியா

48 mins ago

க்ரைம்

52 mins ago

இந்தியா

1 hour ago

விளையாட்டு

1 hour ago

க்ரைம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஜோதிடம்

5 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

10 hours ago

மேலும்