குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பராமரிப்பு இன்றி இருக்கும் குழந்தைகள் பாலூட்டும் அறை :

By செய்திப்பிரிவு

குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் பராமரிப்பு இன்றி இருக்கும் பாலூட்டும் அறையை சீர் செய்து பயன்பாட்டு கொண்டு வர வேண்டும் என்று தாய்மார்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை சிறப்பு திட்டத்தை அமல்படுத்தினார். அதன் மூலமாக தமிழகமெங்கும் பேருந்து நிலையங்களில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை கட்டப்பட்டு, இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தத் திட்டம் தாய்மார்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகிறது. இந்த நிலையில் குறிஞ்சிப்பாடி பேருந்து நிலையத்தில் உள்ள பாலூட்டும் அறை பராமரிப்பின்றி கதவுகள் உடைந்து காணப்படுகிறது.

இதனால் தாய்மார்கள் கூச்சப்பட்டு குழந்தைக்கு பாலூட்டும் அறைக்கு செல்ல தயங்கி வருகின்றனர்.

குறிஞ்சிப்பாடி பேருராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து குழந்தைகள் பாலூட்டும் அறையை சீர்படுத்தி பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் தாய்மார்கள் உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

4 mins ago

சுற்றுச்சூழல்

14 mins ago

தமிழகம்

42 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

வணிகம்

9 hours ago

கல்வி

9 hours ago

விளையாட்டு

9 hours ago

சினிமா

10 hours ago

சினிமா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்